புது ஊழி திறவாக்கும் புதுயுகன்
கவிஞர் புதுயுகன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, புதினம் உள்ளிட்ட பல இலக்கிய வடிவங்களில் இயங்கி வரும் ஒரு பன்முகப் படைப்பாளர்.
புதுயுகன் ஒரு கல்வியாளர். இலண்டன் உயர்கல்வித்துறையில் தலைமைப் பொறுப்புகளில் பல ஆண்டுகளாக மிளிர்கிறவர். திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியில் 1972ஆம் ஆண்டு பிறந்த புதுயுகன், உலகின் புகழை எல்லாம் ஒரு புள்ளியில் குவித்து வைத்திருக்கும் இலண்டனில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்தில் ‘ராம் கள்ளபிரான்’ என்றும் அறியப்படுகிறார்.


தமிழ்நாட்டில் கணிப்பொறியியல் கற்றார். பின், இங்கிலாந்தின் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியிலும், உயர்கல்வியிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.
புதுயுகன், பல்வேறு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். “இங்கிலாந்து உயர்கல்வித் துறையின் வித்தகர்” என்றும், “இங்கிலாந்து கல்வித்துறையின் ஆக்கப்பூர்வ மாற்றத்திற்கான உந்து சக்தி” என்றும் இவரது பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
உலக மரபுடைமைத் தலங்களை, வரலாற்றுத் தளங்களை விரும்புகிறவர். டெஸ்ட் கிரிக்கெட், வானியல் மற்றும் சதுரங்க ஆர்வலர்.
நவீனயுகத்தின் பொருண்மைகள், பேதமற்ற சமூகம் போன்றவற்றை எழுத்து விதைகளாய்த் தூவுகிறவர். முக்கியமாக, உலகின் அறிவுத் தலைமையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற நீள்கனவைத் தொடர்ந்து எழுதி வருகிறவர்.
தனது மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் இலண்டனில் வாழ்கிறார்.
- www.ukheconsultants.co.uk UKHE Consultants Ltd. என்ற உயர்கல்வி ஆலோசனை நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்திவருகிறார்
- உடற்நலப் பராமரிப்பு வழங்கும் www.uksaid.care என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார்.



புதுயுகனின் படைப்புலகு

கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை (கட்டுரை [தன்முனேற்ற நூல்] - 2018)
புத்தக மதிப்புரைகள்
உயர்கல்வித்துறையில் ஏற்படும் சவால்களை இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை வரிசை நூல்களில் எந்த நூல் போலவும் இல்லாமல், புது வகையாகப் படைக்கப்பட்ட...

மின்தமிழ் (ஆய்வு - 2017)
புத்தக மதிப்புரைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட தமிழ் எழுத்துகள், கீழடி தமிழர்க் கலாசாரம் போன்றவற்றைப்...
தமிழ் தாத்தா உ.வே.சா. பல ஊர்களுக்கு சென்று தேடி அலைந்து தமிழ் ஏடுகளை...

மழையின் மனதிலே(புதினம் - 2015)
புத்தக மதிப்புரைகள்
உலகச் சிறகுகள் என்று போற்றப்படும் ஆங்கிலம், பக்கத்துப் பிரஞ்சுக்கரையில் பறந்ததே இல்லை என்று...
பயனும் பேரெழிலுமாய் புதுயுகனின் கவிதைகள் பளிச்சிடுகின்றன. எப்படிக் கவிதைகள் இருக்க வேண்டுமென்பதற்கு இப்படி...
இணையத்தில் கவிஞர் புதுயுகன்
“Pudhuyugan ponders” என்ற தனது வலைப்பதிவில் கவிதைகள், சிந்தனைகள், மற்றும் சமூகக் கருத்துகள் போன்ற பலதரப்பட்ட உள்ளடக்கங்களை எழுதியுள்ளார். இந்த வலைப்பதிவு, அவரது புத்தகங்களில் வெளிப்படும் அதே ஆழ்ந்த சிந்தனையையும், படைப்புத் திறனையும் வெளிப்படுத்துகிறது. புதுயுகனின் வலைப்பதிவை இங்கே காணலாம்: http://pudhuyugan.blogspot.com/
எழுத்தாளர் புதுயுகனின் எண்ணங்கள், உரைகள், கவிதைகள், மற்றும் நூல் வெளியீடு நிகழ்வுகளை இங்கே அவருடைய நும்காணொளி நிலையத்தில் [யூடியூப் சேனல்] இங்கே காணலாம்: Pudhuyugan YouTube Channel – https://www.youtube.com/@Pudhuyugan.
இணைய ஊடகங்களில்
கவிஞர் புதுயுகன் குறித்த செய்திகள், நேர்காணல்கள் மற்றும் தகவல்கள் இணையத்திலும், செய்தி ஊடகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில:
புத்தக மதிப்புரைகள்
கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை:
கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை:
பிற இணைப்புகள்
- எழுத்துத் தள அறிமுகம்
- கம்பன் தமிழ் மையம்
- வேதாரண்யத்தில் ஒரு விடிவிளக்கு: தென்றல் – பகுதி 2
- திறனாய்வு தமிழ் தோட்டம்
- பாவேந்தமும் பாரதியமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்களி (முனைவர் மோகன், 2014) பாரதி அமுதமாய் – தமிழ்ஆத்தர்ஸ்
- மழையின் மனதிலே – தமிழ்ஆத்தர்ஸ்
- இணையத்தில் தமிழ் காலத்தின் கட்டாயம் – தினமலர்
- காமன் ஃபோல்க்ஸ் – நூல்கள்
- வேரும் விழுதும் – எழுத்து
புதுயுகன் யூடியூப் சேனல்-
வரவேற்புரை: கவிஞர் இரா. இரவி. \'கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\' நூல் வெளியீடு. நன்றி
கவிஞர் புதுயுகனின் \'கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\' நூல் வெளியீட்டு விழா. மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் இரா. இரவி அவர்களது வரவேற்புரை . சர்வதேச நோக்கு, உயர்கல்வி, தன்னம்பிக்கை, ஆளுமை போன்ற அம்சங்கள் கொண்ட சுயமுன்னேற்ற நூல் இது. நூல் பதிப்பு: வானதி பதிப்பகம், சென்னை , இந்தியா காணொளி: நன்றி நெல்லை கதிர் டி வி
சிறந்த தலைமைத்துவ விருது
‘சிறந்த தலைமைத்துவ விருது’ தருணங்கள் மற்றும் விருது ஏற்பு உரை. பிப்ரவரி 22, 2024 அன்று துபாயில் நடந்த மாநாட்டின் போது கல்வி 2.0 ஆல் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
பாரம்பரிய பத்திரிகைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:

‘மழையின் மனதிலே’ நூல் பற்றிய மதிப்புரை, மக்கள்குரல் நாளிதழில் (ஜனவரி 8, 2016)

‘கவிதை உறவு’ இதழில் வெளியான ‘மடித்து வைத்த வானம்’ நூலின் மதிப்பீடு [April 2014]

’மின்தமிழ்’ என்ற கவிஞர் புதுயுகனின் புத்தகம் குறித்த கட்டுரை, தினமலர் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது.

சிறப்புக்கட்டுரை, ஜனவரி 6, 2019 அன்று தினமலர் மதுரை நாளிதழில் வெளியானது.
வலைப்பதிவு இடுகை
“Pudhuyugan ponders” என்ற தனது வலைப்பதிவில் கவிதைகள், சிந்தனைகள், மற்றும் சமூகக் கருத்துகள் போன்ற பலதரப்பட்ட உள்ளடக்கங்களை எழுதியுள்ளார்.
‘முத்தமிழ் வெளியில் முருகனின் முக்காலத் தடம்’
செம்மொழி மாநாட்டின் ஆய்வு போல இன்று, ‘முத்தமிழ் முருகன் மாநாட்டில்’ வாரியார் சுவாமிகள் அரங்கில், மாலை எனது மேற்கண்ட ஆய்வு வெளியாகிறது. சமூகத்தில் நிலவும் நம்பிக்கைளும், கூட்டு விழுமியங்களும் அச்சமுகத்தின் நீண்ட நாள் பதிவுகளின் பால் அமைவுறுகின்றன. காட்டாக, குழந்தை ஏசுவின் ஓவியத்தை விடவும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரானின் ஓவியமே அதிகம் காணப்படுவது, கொடைக்கான நன்றி அறிவித்தலைச் சிறப்பாகச் செலுத்துதலையே முதன்மை மாண்பாக அச்சமூகம் கருத்துதலைக் காட்டுகிறது….
A question to God – why did you create us?
This question triggered a series of other questions. What is the scarcest commodity in the world – oil, water, gold? None of these but lovers are the scarcest commodities in the world as only a rare few are au fait in loving fellow beings.
What a ‘pen’tastic relationship!
The room is filled with pitch darkness. You are left wondering whether it was the right move to have ventured into the room in the first place. All of a sudden a warm grip on your wrist conveys assurance. You don t seem to know this person completely.
மாயா யதார்த்தம் – ஒரு சிறிய அறிமுகம்
இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல,வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான். மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான்.
சிறப்புகள் … விருதுகள்.. புதுயுகன்…
1994ல் ‘குமுதம்’ இதழில் வெளியான 'தாய்மை' குறுங்கதையின் மூலம் இவரது இலக்கிய வாழ்வு தொடங்கியது. அடுத்து, கணையாழி, கல்கி உட்பட பல பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும், குறுநாவலும் வெளியாகின. புதுயுகன் பெற்றிருக்கிற சிறப்புகளில் சில….
உலக சாதனைக் செம்மல் விருது
தமிழ்க்கவிதை, இலக்கியம், கலாசாரம், கல்வி போன்றவற்றிற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.
தலைசிறந்த தலைமை விருது
- Education 2.0 நிறுவனம் துபாயில் நடத்திய சர்வதேச கல்வியாளர்கள் மாநாட்டில், இவரது நீண்ட கல்விச் சேவைகளைப் பாராட்டி, இந்த விருதை வழங்கியது.
- ‘அயலகத் தமிழர் தின’ விழாவில், இவரது சிறுகதைத் தொகுப்பும், கவிதை நூலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவரது படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கவிதை உருவ! இலக்கிய இதழ் பரிசு
- “கவிதை உறவு” இதழ் நடத்திய போட்டியில் ‘கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை’ என்ற நூல், பரிசு வென்றது
அட்வான்ஸ் HE கற்பித்தல் & கற்றல் மாநாடு, ஆஸ்டன் பல்கலைக்கழகம் இங்கிலாந்து
- கற்றல், கற்பித்தல் மதிப்பீடு மற்றும் கல்வி ஆராய்ச்சியில் ஆளுமை குமிழ்களின் பயன்பாடு.” என்ற தலைப்பிலான இவரது ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
இணையத்தளத்தின் பரிசுகள்
- ‘எழுத்து’ தளத்தில் இவரது கவிதைகள் முதல் பரிசுகளை வென்றன.
‘கம்பன் விழா’, காரைக்குடி கம்பன் கழகம்
- இந்த மாநாட்டில், இவரது கட்டுரை சிறந்த ஆய்வுகளில் ஒன்றாகப் பரிசு பெற்றது.



எங்களை தொடர்பு கொள்ள
ஏதேனும் யோசனைகள் அல்லது கருத்துகள் உள்ளதா? தயங்காமல் இந்த முகவரிக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.
மின்னஞ்சல்
மின்னஞ்சல்: pudhuyugan@yahoo.com