கதவு இல்லாத கருவூலம் (புதுக்கவிதைகள்) 2013
புதுயுகன் எழுதிய கதவு இல்லாத கருவூலம் கவிதைத் தொகுப்பு, தமிழ்க் கவிதை உலகுக்கு ஒரு புதிய வாசலைத் திறக்கிறது. இமயம் முதல் நயாகரா வரை, உலகத்தின் தனித்தடங்கள் முதல் தொழில்நுட்பத்தின் எதிர்கால மாற்றங்கள் வரை, நுண்ணிய வாழ்வியல் சித்திரங்கள் முதல் தத்துவத் தேடல்கள் வரை பல தளங்களில் இயங்குகிறது. தேய்ந்த தடங்களைப் புறக்கணித்து, தனக்கென ஒரு புதுப் பாதையை உருவாக்கி, புதுமையான கருத்துகளையும், வசீகரமான சொல்லாட்சியையும் கவிஞர் புதுயுகன் கையாண்டுள்ளார்.
புத்தக மதிப்புரைகள்
சமூகத்தில் நிலவும் அனைத்து அவலங்களையும் தன் பாடுத்திறத்தாலே புட்டு புட்டுவைத்து இருக்கிறார். இந்தியாவின் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு உலகளவில் கொண்டுவரும் இந்தியாவின் தாய்ப்பால் என்னும் கல்வி மூலம் வெளிப்படுத்தும் பாங்கு புதியகனுக்கு தனிப்பெருமை சேர்ப்பதாகும்