மின்தமிழ்  (ஆய்வு) 2017

மின்தமிழ், 2017-ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்நூல், தமிழ் மொழியின் மரபைப் பாதுகாக்க, உ.வே.சா. அவர்களின் பணியைப் போன்ற ஒரு முயற்சி தேவை என வாதிடுகிறது. இது, பழங்காலச் சுவடிகள் மற்றும் நவீன இணையத் தமிழ் ஆகிய இரண்டையும் மின்தரவகம் மூலம் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தமிழின் செழுமையான கடந்த காலத்தையும், அதன் துடிப்பான மின் எதிர்காலத்தையும் பாதுகாக்க இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது.

2017இல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது

புத்தக மதிப்புரைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட தமிழ் எழுத்துகள், கீழடி தமிழர்க் கலாசாரம் போன்றவற்றைப் பழமை மாறாமல் மின் ஆவணம் மூலம் எளிதாக ஆய்வு செய்ய இயலும். இயற்கைப் பேரிடர்களால் அழியாது; அழிக்கவும் முடியாது . தமிழ் மீதான உணர்வுப்பூர்வமான பாசத்தால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் ஆசிரியர் புதுயுகன்.

— காசு, தினமலர் (2017)

தமிழ் தாத்தா உ.வே.சா. பல ஊர்களுக்கு சென்று தேடி அலைந்து தமிழ் ஏடுகளை சேகரித்து அழிவிலிருந்து பாதுகாத்து அச்சுப்பதித்து இன்று நாம் பழந்தமிழ் இலக்கியங்களை படித்து மகிழ வழி செய்தார். அதுபோல் இணையத்தில் தமிழ் என்பது காலத்தின் கட்டாயம். மின் ஆவணக் காப்பகம் மூலம் தமிழ் மொழியை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும், என்று பேசும் புதுயுகனின் ஆய்வு நூல், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வெளியானது.

— தினமலர், மதுரை, 2017

மேலும் நவீனக் கவிதைகளை வாசிக்க

கதவு இல்லாத கருவூலம்


புதுக்கவிதைகள்
2013
புதுயுகன் எழுதிய கதவு இல்லாத கருவூலம் கவிதைத் தொகுப்பு,...

மழையின் மனதிலே


புதினம்
2015
2015-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மழையின் மனதிலே...

ஒளி உறுமும் கான் 


புதுக்கவிதைகள்
2024
2024-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒளி உறுமும்...
Top